விவேகானந்தா யோகா மையம்
அனைவருக்கும் யோகா - Therapeutic YOGA

பதஞ்சலி யோகா சூத்திரங்களை எளிய முறையில் அனைவருக்கும், எக்காலத்திற்கும் பயன்படும் வகையில் விரிவாக விளக்கம் அளித்த விவேகானந்தரின் ஹதயோக ஆசனப் பயிற்சி , கிரியா யோகா, பிராணாயாம மூச்சுப் பயிற்சி மற்றும் முத்திரைகள் மூலம் "அனைவருக்கும் யோகா " என்ற நோக்கில் ஸ்ரீரங்கம் விவேகானந்தா யோகா மையத்தினை 2005 ஆம் ஆண்டில் இருந்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறோம்.

 

நோக்கம் 

  • அனைவருக்கும் ஆரோக்கியம்,
  • ஆரோக்கியத்திற்கான வாழ்க்கை பாதையை உருவாக்குதல்.
  • சிறந்த முறையில் பல ஆயிரம் யோகா பயிற்றுநர்களை உருவாக்குதல்,

 

குறிக்கோள்

  • "நம் ஆரோக்கியம் நம் கையில் "
  • ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குதல்.

    யோகா கலையை நோய்களுக்கான தீர்வாக மட்டும் கருதாமல் அனைவரும் அறிய வேண்டிய வாழ்வியல் முறையாகும். தனி மனிதன் மூலம் குடும்பமும், குடும்பத்தின் மூலம் சமுதாயமும் , சமுதாயத்தின் மூலம் நாடும் நலம் பெற யோகா கலை ஒரு வரம் ஆகும்.

    விவேகானந்தா யோகா மையத்தை துவக்கி 12 ஆண்டு காலமாக சிறப்பான முறையில் உடல்,மனம்,அறிவியல் சார்ந்த யோகா பயிற்சிகளை அனைத்து வயதினருக்கும் தனி கவனத்துடன் பயிற்றுவித்து வருகிறோம் . இதுவரை 14,500கும் மேற்பட்டவர்களிடம் யோகா கலையை தினசரி வாழ்வியல் முறையாக அமைத்து தந்துள்ளோம்.

 

ஒவ்வொரு தினத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. ஞாயிற்றுக்கிழமையுடன் சஷ்டி திதி சேர்ந்து வந்தால் அந்த நாளை 'பானு சஷ்டி' என்றும், ஸப்தமி தி சேர்ந்து வந்தால் 'பானு ஸ்ப்தமி' என்றும் கூறுவர். பானு ஸ்ப்தமியை- 'பானு யோகம் என்று குறிப்பிடுவர். இது, ஆயிரம் சூரிய கிரஹணங்களுக்குச் சமமாக புராணங்களில் போற்றப்படுகிறது.

அதாவது பானு ஸப்தமி அன்று நாம் செய்யும் பூஜைகள், மந்திரங்கள், சூரிய நமஸ்காரம் செய்வதும், ஹோமங்கள், தானங்கள் போன்றவை சாதாரண நாட்களில் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தைக் காட்டிலும் சுமார் ஆயிரம் மடங்கு அதிக புண்ணியத்தைத் தரக்கூடியவை.