விவேகானந்தா யோகா மையம்
அனைவருக்கும் யோகா - Therapeutic YOGA

By: vycsrgm | March 17, 2017

   இன்று நாம் வாழும் சூழல் என்பது பல பிரச்சனைகளை உள்ளடக்கிய ஒரு மாசுபட்ட சூழலாகவே  உள்ளது. அந்த சூழ்நிலையில்தான் வாழ்ந்தாக  வேண்டிய  கட்டாயத்தில் நாம் தள்ளப்பட்டு உள்ளோம். முன்பெல்லாம் நம் முன்னோர்கள் 100 வயதிலும் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்று நோய்  குறைபாடுடன் குழந்தைகள் பிறந்து, அந்நோயுடன் வாழ்ந்து, வாழ்நாள் முழுவதும் துடிப்பற்ற நோயாளிகளாக வாழ்கிற சூழ்நிலை நிலவுகின்றது. இதற்கு காரணம் "நம் உணவு, பண்பாட்டு, பாரம்பரிய, வாழ்க்கை முறையை மறந்ததே". 


    நம் பாரத தேசத்தில் தோன்றி வளர்ந்த யோகா என்ற அற்புதமான ஆரோக்கிய கலையை  நாம் மறந்து விட்டோம். யோகாவின் உடல், மனம்  மற்றும்  ஆன்ம பலனை புரிந்து மேலை நாட்டினர்  பயின்று அதன்படி பயிற்சி செய்து நலமுடன் வாழ்ந்து வருகின்றனர்.ஆனால் நம் நாட்டில் நோயை குணப்படுத்த, மேலை நாடுகளால் தடை செய்யப்பட்ட  தீய மருந்துகளை உண்டு உணர்வற்ற வாழ்வை வாழ்ந்து வருகிறோம்.       

 

    நமக்கு இன்று தீராத நோய்களாகிய இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் , இரத்த குழாய்களில் அடைப்பு, கேன்சர் , முழங்கால் மூட்டு வலி, மிகை உடல் எடை, ஆஸ்துமா, வெண் குஷ்டம், மன அழுத்தம், தலை வலிகள், தைராய்டு, குழந்தையின்மை, முதுகு வலி, போன்ற அனைத்து  உடல், மனம் சார்ந்த  உபாதைகள் எளிய யோகா பயிற்சியின் மூலம் முழுமையாக விடுபட முடியும் என நவீன அறிவியல் பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது.  

       

    பதஞ்சலி முனிவர் யோகக் கலையை நடராஜரிடம் இருந்து பெற்றார் என்பது நம்பிக்கை . அவரால் எழுதப்பட்ட யோகா சூத்திரங்களுக்கு சுவாமி விவேகானந்தர் எக்காலத்திற்கும் பயன்படும் வகையில் விரிவாக உரை எழுதியுள்ளார்.இதையே இன்று முழுமையாக யோகா அறிவு பெற்றவர்கள் பின்பற்றி வருகின்றனர். யோகா என்றாலே நமக்குப் பதஞ்சலி முனிவரும் சுவாமி விவேகானந்தரும் இரு கண்களாக இருந்து வழிகாட்டுகிறார்கள். 

   

    அனைவரும் ஒரு முழுமையான, மகிழ்ச்சியானா, நிறைவான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம். அத்தகைய வாழ்க்கைக்கு ஓர் இனிய வழி யோகா. நமக்கு யோகா மட்டுமே ஆரோக்கிய வாழ்க்கைக்கான உன்னத மருந்து.                     


    சுவாமி விவேகானந்தர் கூறியது போல "ஒவ்வோர் ஆன்மாவும் தெய்வீகம் நிறைந்தது.புற மற்றும் அக இயற்கையை அடக்குவதன்  மூலம் இந்த அக தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே நமது இலட்சியம்". 


    சற்று சிந்திப்போம். இனி வரும் காலங்களில் நலமுடன் வாழ யோகாவை நம்புவோம். நம் ஆரோக்கியம் நம் கையில் என்பதை நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்து காட்டினார்கள். இதை உலகறிய செய்வோம். உணர்வுடன், நலமுடன் வாழ்வோம். இத்தகைய பெரும் முயற்சியில் ஸ்ரீரங்கம் விவேகானந்தா யோகா மையம் ஈடுபட்டுள்ளது.  

Category: Uncategorized 

Tags:

Comments:

Sriram venkatraman

Posted on : September 04, 2021

Thanks Sridhar & SanthanaKrishnan sir for your valuable service to the society. I really appreciate your effort. You've shown me that I am more than what others may think of me, and that I can rise above any obstacle that comes through my path.


ந.சிவனேஸ்வர்ராஐ.

Posted on : August 14, 2020

நன்றி ,நான் யோக பட்டப் படிப்பு படிக்க விரும்புகின்றேன் .(தமிழ் மொழி மூலம்)
தயவு செய்து ஆன உதவிகளைச் செய்து தாருங்கள்.


Post a Comment